உருகுணை பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேல் கலிலி தேசிய முகாமைத்துவ நிறுவனத்திற்கு இடையில் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது
விவசாயத்துறையில், விஞ்ஞான ரீதியான மற்றும் முகாமைத்துவ ரீதியான, அறிவு மற்றும் திறன்களை பரிமாற்றிக் கொள்ளும் நோக்கில் உருகுணை பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேல் கலிலி தேசிய முகாமைத்துவ நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்பாட்டை மேற்கொள்வதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இரு தரப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்பாட்டை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.