crossorigin="anonymous">
விளையாட்டுவெளிநாடு

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சீனா முதல் தங்கப் பதக்கத்தை வென்றது

ஜப்பான் 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மகளிருக்கான 10 மீட்டர் குறிப்பார்த்து சூடும் போட்டியில் சீனா தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றில் இரண்டு தென் கொரிய வீராங்கனைகள் மற்றும் நோர்வே, சீனா, அமெரிக்க வீராங்கனைகள் உட்பட 8 பேர் தகுதி பெற்றனர்.

இறுதி போட்டியில் சீனாவைச் சேர்ந்த யாங் கிங் தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சீனா முதல் தங்கப்பதக்கத்தை வென்றது.

இதேவேளை ,பதக்கப் பட்டியலின் தற்போதைய நிலவரப்படி சீனா 3 தங்கம், ஒரு வெண்கலம் அடங்கலாக 4 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

இத்தாலி ஒரு தங்கம் ஒரு வெள்ளி அடங்கலாக 2 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும், ஜப்பான் ஒரு தங்கம், ஒரு வெள்ளியுடன் 2 பதக்கங்களைப் பெற்று 3வது இடத்திலும் இருக்கின்றது.

தென்கொரியா 1 தங்கம், ஒரு வெண்கலப்பதக்கத்துடன் 4வது இடத்தில் உள்ளது. இந்தியா ஒரு வெள்ளிப்பதக்கத்துடன் 14வது இடத்தில் இருக்கின்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 55 − = 48

Back to top button
error: