(நதீர் சரீப்தீன்)
இவ்வாண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல். பத்தாம் திகதி வரையில் நடைபெற்ற 2020 ஆண்டு க்கான க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டவர்களுக்கான கொடுப்பனவுகள் இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
பரீட்சை நடைபெற்று நான்கு மாதங்களைக் கடந்துள்ள நிலையில் ஒரு சிலருக்கு மாத்திரம். கொடுப்பனவுகள் கிடைத்துள்ளதாகவும் ஏனையவர்களுக்கு இதுவரையில் கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறாமையானது பெரும் ஏமாற்றத்தை தருவதாக பரீட்சை கடமைகளில் ஈடுபட்ட அதிபர், ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து பரீட்சை மண்டபங்களில் கடமையாற்றிய அதிபர், ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை உடன் வழங்கிட பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரீட்சை கடமைகளில் ஈடுபட்டவர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.