சில தொழில் நிறுவனங்கள் தொடர்ச்சியான பொறுப்பற்ற நிலைமையினால் சந்தையிலுள்ள செஷி பக்கெட்டுக்களை (சிறு நறுமணப்பை) அடுத்த மாதம் முதல் சோதனைக்குட்படுத்தப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க தெரிவித்தார்.
மேலும், செஷி பக்கெட்டுக்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 31 முதல் 20 மி.கி, 20 மில்லி லீற்றர் அளவிலான செஷி பக்கெட்டுக்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளைஇ லஞ்ச் ஷீட்களுக்கான தடை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை சுற்றாடல் அமைச்சரின் அனுமதிக்காக சுற்றாடல் அமைச்சிற்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.