ஜப்பான் – டோக்கியோ நகரில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிபப்பு
ஜப்பான் – டோக்கியோ நகரில் இன்று ஒரே நாளில் 2848 பேர் புதிதாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
2020 ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் பெரும் எண்ணிக்கையில் இன்று அளவில் பதிவாகி உள்ளனர்
டோக்கியோ நகரில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு அவசரகால நிலைமை அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து ஜப்பானிய தலைநகரில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று தான் பாதிப்பு அதிக எண்ணிக்கையில் பதிவாகி உள்ளதாக அந்தநாட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி சம்பந்தப்பட்டவர்கள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக ஒலிம்பிக் அமைப்பாளர்கள் கூறியுள்ளனர். அவர்களில் 4 பேர் விளையாட்டு வீரர்கள் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஒலிம்பிக் போட்டிகளுக்காக சரியான கட்டுப்பாட்டு விதிகள் அமலில் இருந்த போதிலும் விளையாட்டு வீரர்கள் உள்பட 155 பேருக்கு கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது,