மட்டக்களப்பு முகத்துவாரம் (ஆற்றுவாய்) பகுதியை அன்மித்த சீலாமுனை வாவியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய நிலையில் டொல்பின் ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் நேற்று (28) மாலை பொதுமக்களினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சீலாமுனை வாவிக் கரையில் சுமார் 4 அடி நீளமான டொல்பின் ரக மீன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களதிற்கும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு கடற்கரைப் பகுதிகளில் இறந்த நிலையில் ஆமைகள் மற்றும் டெல்பின் மீன்கள் கரை ஒதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.