பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அவர்களின் தலையீட்டினால் உலகை காணும் வரம் பெற்ற பிறப்பிலேயே தனது பார்வையை இழந்த கலென்பெந்துனுவெவ, பலுகொல்லாகம ஜீவந்த ரத்நாயக்க சிறுவன் நேற்று (28) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.
13 வயதான ஜீவந்த ரத்நாயக்க சிறுவன் தனக்கு பார்வை வேண்டி சமூக வலைத்தளங்களில்; எழுப்பிய குரல் .ரோஹித ராஜபக்ஷ அவர்களை சென்றடைய, அவர் அதனை தனது தாயான, பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
முதலில் சிறுவனை கொழும்பிற்கு அழைத்து நாட்டின் சிறந்த மற்றும் புகழ்பெற்ற கண் மருத்துவரிடம் அவரை சிகிச்சைக்காக அனுமதித்து, அச்சிறுவனுக்கு பல பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
அப்பரிசோதனைகளுக்கமைய கண் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளாது அச்சிறுவனின் ஒரு கண்ணில் பார்வை பெற முடியும் என்ற விசேட வைத்திய நிபுணரின் பரிந்துரைக்கமைய சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.
அதற்கமைய .ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள் அனைத்து சுமைகளையும் பொறுப்பேற்று, பல சந்தர்ப்பங்களில் அச்சிறுவனை கொழும்பிற்கு அழைத்து தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவ்வாறே ஜீவந்த ரத்நாயக்க சிறுவனுக்கு உலகை காணும் வரம் கிடைத்தது.