crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஆபாசமான வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோரை கைது செய்ய நடவடிக்கை

இலங்கையில் சிறுவர்களை இலக்காகக் கொண்டு ஆபாசமான வீடியோக்களையும், புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோரை கைது செய்ய விசேட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குற்றப்புலனாய்வு திணைக்களம், பொலிஸ் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகம் ஆகியன இணைந்து இது குறித்து விசேட தரவுத்தளத்தின் மூலம் இணையத்தில் ஊடாக இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி முதல் நேற்றைய (28) தினம் வரை மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான விசாரணைகளில், சிறுவர்கள் தொடர்பான ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்த 17,629 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், தற்போது இந்த சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்த தரவுத்தளம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன்மூலம் சிறுவர்களை இலக்காகக் கொண்டு இணையத்தில் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றும் கணனி, டெப், கையடக்கத்தொலைபேசி ஆகியவற்றையும் அடையாளம் காணும் திறனை கொண்டுள்ளதாகவும்” பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 77 + = 86

Back to top button
error: