இலங்கை சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (03) காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில்மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில்பிரதானமாக சீரான வானிலை நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது” என்றும் வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.