(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)
தென் கிழக்காசியா பிராந்தியத்தில் தடுப்பூசி வழங்குவதில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பாராட்டைப் பெற்ற இலங்கை தற்போது வெளி நாடு செல்பவர்களுக்கு வசதியாக விசேட இலத்திரனியல் தடுப்பூசி அட்டைகளையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஊடகத் துறை அமைச்சர் கெஹெலியா றம்புக்வெல்ல (01) தெரிவித்தார்.
குண்டசாலையில் நடந்த வைபவம் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தாவது
“ஒரே நாளில் நாடலாவிய ரீதியில் 5 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்கியமை, ஒரே மாவட்த்தில் (கண்டி மாவட்டத்தில்) ஒரே நாளில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மொடேனா வகை தடுப்பூசியை வழங்கியமை இரவு பகலாக திறந்த வெளியான விகாரமகாதேவி பூங்காவில் தடுப்பூசி ஏற்றப்பட்டமை மற்றும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 85 சதவீத்திற்கு தடுப்பூசி வழங்கியுள்ளமை போன்ற பல விடயங்கள் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டுவருகின்றன. குறிப்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பாராட்டைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது என்றார்.
இன்னும் சில நாட்களில் நான்கு மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்க உள்ளன. அதன் அடிப்படையில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் சகலருக்கும் ஏதொ ஒரு மாத்திரை (டோஸ்) தடுப்பூசி வழங்க முடியும் என்றும் கூறினார்.
ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஷவின் வழிகாட்டலில் 3 வது மாத்திரையையும் (டோஸ் தேவைப்படுபவர்களுக்கு) அதனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகத்” தெரிவித்தார்.