கொழும்பு நகரத்திற்கு உட்பட்ட பகுதியில் ஜூலை மாத இறுதி வாரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 75 வீதமானவர்கள் கொரோனா டெல்ட்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர நேற்று (05) தெரிவித்தார்.
ஜூலை மாத ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 19.3 வீதமானவர்கள் டெல்ட்டாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.