crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பில் சேதனப் பசளை ஊக்குவிப்பு தொடர்பான விசேட செயலமர்வு

சேதனப் பசளை ஊக்குவிப்பு தொடர்பாக உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் விசேட செயலமர்வு ஒன்று மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நேற்றைய தினம் (07) இடம்பெற்றது.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் பால் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்திற்கு அமைவாக நாடளாவிய ரீதியில் சேதனப்பசளை ஊக்குவிப்பு தொடர்பான செயலமர்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான செயலமர்வுகள் அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் நிலையில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஷின் ஒருங்கிணைப்பில் நேற்றைய தினம் (07) நடைபெற்ற குறித்த செயலமர்வில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதற்காக சேதனை பசளையின் பயன்பாட்டை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும், ஜனாதிபதியின் திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது

இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதன் ஊடாக மக்களுக்கு கிடைக்கவிருக்கும் நன்மைகள் தொடர்பாகவும், சேதனை பசளை உற்பத்தியினை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக ஏவ்வாறு ஊக்குவிப்பது தொடர்பாகவும், விவசாயிகளே சேதனைப்பசளையினை எவ்வாறு தயாரிப்பது, அதற்கான ஊக்குவிப்பு உதவிகளை அரசாங்கத்தின் ஊடாக எவ்வாறு பெற்றுக்கொடுப்பது என்பவை தொடர்பாக இதன்போது பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.

சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்ற குறித்த செயலமர்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துஷித பி.வணிகசிங்க, ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் துறைசார் அதிகாரிகள் என குறிப்பிட்டளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 78 + = 86

Back to top button
error: