சிறுவர்களின் ஆபாச புகைப்படங்களை இணையத்தளங்களில் பதிவேற்றிய 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட படல்கும்புர பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று (07) நீதி மன்றத்தில் ஆஜார் செய்யப்பட்ட பின்னர் எதிர்வரும் 20 ஆம்திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபர் போலி பெயரிலான முகப்புத்தகத்தின் ஊடாக (Facebook) சுமார் 500 ஆபாச புகைப்படங்களை இணையத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவர் போலியான பெயரில் இவற்றை இணைத்தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்துள்ளார் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
ஆபாசக் காணொளிகளை இணையத்தளங்களில் பகிர்ந்த மேலும் 10 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இவர்களை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அனைவரும் அடுத்த வாரமளவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.