crossorigin="anonymous">
உள்நாடுபொது

தொற்றாளர்களை மருத்துவ மேற்பார்வையில் வீட்டில் தனிமைப்படுத்த வேலைத்திட்டம்

சிக்கல் நிலையற்ற தொற்றாளர்கள் மற்றும் நோய் அறிகுறிகள் ஓரளவுக்கு தென்படுகின்ற கொவிட் தொற்றாளர்களை மருத்துவ மேற்பார்வையின் கீழ் வீட்டிலே தனிமைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் இன்று (09) முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளது.

2 வயதிற்கும், 65 வயதிற்கும் உட்பட்ட, கடுமையான நோய்கள் இல்லாத கொவிட் தொற்றாளர்கள், இவ்வாறு வீட்டில் வைத்து மருத்துவர்களால் கண்காணிக்கப்படுவார்கள்.

இந்த வேலைத்திட்டம்;, ஏற்கனவே மேல் மாகாணத்திள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், டெல்டா வைரஸ் பரவல் காரணமாக நாளுக்கு நாள் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகத்து வருவதைத் கருத்தில் கொண்டே இத் திட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இத் திட்டம் குறித்து சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது இதற்காக 24 மணி நேர பிரதான தொலைபேசி அழைப்பு மையமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது அதன் தொலைபேசி எண் 1390 ஆகும்.

இந்த தொலைபேசி எண் ஊடாக, வீட்டில் இருக்கும் கொவிட் தொற்றாளர்கள், இலகுவாக தமது வீடுகளிலிருந்து 14 நாட்கள் மருத்துவ மேற்பார்வையின் கீழ் சிகிச்சை பெற முடியும்.

இங்கு நோயாளி, வீட்டிலிருந்து சிகிச்சை பெற விரும்பினால், அவர் அதற்கான சம்மதத்தையும் தெரிவிக்க வேண்டும்.

14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர் அப்பகுதியில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் ஊடாக அவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீட்டினுள் தனிமைப்படுத்தப்படுகின்ற தொற்றாளர்கள், நிருவகிக்கப்பட வேண்டிய முறை பற்றியும் அவர்களுக்கான புதிய வழிகாட்டல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், கணினி தொழில்நுட்பம் மூலம் நோயாளிகள் பதிவு செய்யப்படுவர்.

இதேவேளை, கடுமையான நோய்களால் பாதிக்கப்படுகின்ற கொவிட் தொற்றாளர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது, அவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 69 + = 71

Back to top button
error: