crossorigin="anonymous">
அறிவியல்

கொவிட் -19 தொற்று காரணமாக சுவாசிப்பதில் சிரமங்களை குறைப்பதற்காக இருப்பு

கொவிட் – 19 வைரஸின் விகாரமடைந்த டெல்ற்றா தற்போது நாடு முழுவதும் கட்டுப்படுத்த முடியாத வகையில் பரவி வருகின்றது. கொவிட்-19 நோய்த் தொற்று வேகமாக பரவுவதைக் கருத்தில் கொண்டு, அறிகுறிகள் தென்படாத நோயாளிகள் மற்றும் தீவிரமற்ற அறிகுறிகள் தென்படும் நோயாளிகளுக்கு வீட்டிலேயே வைத்து வைத்தியசாலைகளில் வழங்கப்படும் சிகிச்சைக்கு நிகரான சிகிச்சை அளிப்பதற்கான பொறிமுறை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்று நோய்க்கு வீட்டிலேயே வைத்து வழங்கப்படும் சிகிச்சை முறைகளைப் பற்றி முன்னர் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. கொவிட் – 19 தொற்று நோயால் ஏற்படும் சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிவதை உறுதி செய்வதற்காக வீட்டிலேயே வழங்கும் சிகிச்சை முறைகளை பெற்றுக் கொள்ளும் பொழுது நோய் அறிகுறிகளின் அதிகரிப்பை அடையாளம் காண்பது மிகவும் அவசியமாகும்.

ஓய்வு நேரத்தில் மற்றும் குறைந்தளவாக வேலை செய்யும் பொழுது மூச்சுத் திணறல் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படல் வேண்டும். அதே ஓய்வு நேரத்தில் மற்றும் குறைந்தளவாக வேலை செய்யும் பொழுது குருதியில் ஒட்சிசனின் அளவு 90% விட குறையும் பொழுது உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படல் வேண்டும்.

கொவிட் -19 தொற்று நோய்க்காக வீட்டிலேயே இருந்து அடிப்படை சிகிச்சை பெறுவதற்காக பதிவு செய்து கொண்ட நோயாளிகளிடத்தில் மேற்குறிப்பிட்ட நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சம்மந்தப்பட்ட மருத்துவ குழுவுக்கு அறிவிக்க வேண்டும். மருத்துவக் குழு சம்மந்தப்பட்ட மருத்துவ நிபுணர்களிடத்தில் கலந்தாலோசித்து நோயாளியை வைத்தியசாலையில் அனுமதிக்க ஏற்பாடுகளை மேற்கொள்வார்கள்.
இதற்கிடையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் நோயாளி சுவாசிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டால் கீழே குறிப்பிட்டுள்ளவாறு இருப்பு நிலைகளை மாற்றுவதன் மூலம் சுவாசிப்பதில் ஏற்படும் சிரமங்களை குறைக்க உதவும்.

சுவாசிப்பதில் சிரமங்களை குறைப்பதற்காக நோயாளி கீழே குறிப்பிட்டுள்ளவாறு ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் இருப்பு நிலைகளை மாற்ற அறிவுறுத்தப்படுவார்கள்.

⦾ 20 – 30 நிமிடங்கள் அவர்கள் கட்டிலில் குப்பற படுக்க வேண்டும். (கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பருமனானவர்கள் மருத்துவ வழிகாட்டுதல்கள் இல்லாமல் இந்த நிலையை பின்பற்றக் கூடாது)
⦾ 20 – 30 நிமிடங்கள் அவர்கள் கட்டிலில் வலது பக்கவாட்டில் சரிந்து படுத்திருக்க வேண்டும்.
⦾ 20 – 30 நிமிடங்கள் அவர்கள் கட்டிலில் அமர்ந்திருக்க வேண்டும்.
⦾ 20 – 30 நிமிடங்கள் அவர்கள் கட்டிலில் இடது பக்கவாட்டில் சரிந்து படுத்திருக்க வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பருமனானவர்கள் இந்த இருப்பு நிலைகளை பின்பற்ற முன்னர் மருத்துவ ஆலோசணைகளை பெற்றுக் கொள்வது மிகவும் அவசியமானதாகும்.

இந்த இருப்பு நிலைகள் உலெகங்கிலும் உள்ள கொவிட்-19 தொற்று நோய் சிகிச்சை மையங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு அங்கிகரிக்கப்பட்ட எளிய நுட்பங்களாகும்.

இருப்பினும், கொவிட் -19 தொற்று நோயால் சுவாசிப்பதில் சிரமங்கள் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது மருத்துவ அறிவுறுத்தல்கள் மற்றும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுதல் போன்ற முக்கிய காரணிகளைப் பற்றி முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாடு முழுவதும் தற்பொழுது கொவிட் – 19 தொற்று நோய் பரவுவதால் தொற்று நோயிலிருந்து மற்றும் அதனால் ஏற்படும் சிக்கல்களிலிருந்து பாதுகாத்து கொள்ள தேவையில்லாத பயணங்கள் மற்றும் கூட்டங்களை தவிர்க்க வேண்டும். இந்த சவாலான காலகட்டத்தில் நாட்டு மக்கள் பொறுப்பாக நடந்து கொள்வதன் மூலம் ஆரோக்கியமானஎதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 27 = 33

Back to top button
error: