அடுத்த மாதம் முதல் இந்தியாவிலிருந்து வாரத்திற்கு ஒரு முறை 100 தொன் ஒக்சிஜன் என்ற வீதத்தில் இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் எஸ்.எச் முனசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இதனை தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் பயணக் கட்டுப்பாட்டை அதிகரித்து, மேலும் சுகாதார வழிகாட்டி ஆலோசனை வெளியிடப்படவுள்ளது என்று சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் எஸ்.எச் முனசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட் தொற்றின் காரணமாக நாட்டின் ஒக்சிஜன் தேவை சுமார் 70 தொன்களாக அதிகரித்துளள்து என்றும் குறிப்பிட்டார்