மோட்டார் வாகனத் திணைக்களத்தின் நாராஹென்பிட்டி மற்றும் வேரகல அலுவலகங்களின் ஊடாக வழங்கப்படும் சேவைகள் எதிர்வரும் புதன்கிழமை (18) தொடக்கம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
திணைக்கள பணியாளர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை இதற்கான காரணமாகும். தொலைபேசியின் மூலம் நேரத்தை ஒதுக்கிக் கொண்ட அனைத்து சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சி கே அலஹகோன் தெரிவித்துள்ளார்.
வாகனங்களை பதிவு செய்தல் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக 070-7 677 877 என்ற தொலைபேசியின் ஊடாகவும்இ சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பாக 070-7 677 977 என்ற தொலைபேசியின் ஊடாகவும் தொடர்புகொள்ள முடியும்.
இதேவேளை, தென், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் வாகன வருமானவரி பத்திரம் வழங்கும் நடவடிக்கையும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. காலாவதியாகும் வருமான வரிப் பத்திரத்திற்காக அவற்றை புதுப்பிக்கும்போது அதற்கான தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது.