இலங்கையில் திருமண வைபவங்களை நடாத்துவதற்கும் இன்று (17) நள்ளிரவு முதல் அனுமதி இல்லை. இருப்பினும், திருமணப் பதிவுகளை மேற்கொள்வதற்கு எந்த தடையும் இல்லை. திருமணப் பதிவை வீட்டிலோ அல்லது வேறு இடத்திலோ மேற்கொள்ளலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்தத் திருமணப் பதிவுக்கு மணமகன், மணமகள், இரு தரப்பினரின் பெற்றோர், பதிவாளர் மற்றும் இரண்டு சாட்சியாளர்கள் மாத்திரமே கலந்து கொள்ள முடியும். அதைத் தவிர, வேறு யாருக்கும் இதில் பங்கேற்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நேற்று (16) முதல் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் பல நடைமுறைப்படுத்த இருப்பதாக பொலிஸார் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இதன்படி, நேற்று முதல் பொதுமக்கள் ஒன்றுகூடுகின்ற எந்தவொரு வைபவங்களையோ அல்லது நிகழ்வுகளையோ நடத்த முடியாது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.