ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானத்தில் பதுங்கிய ஆப்கானிஸ்தானியர்கள்
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் பீதியடைந்துள்ள மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிகின்றனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் தாலிபன்களின் முழு கட்டுப்பாட்டில் இருக்கிறதுடன் நகரில் ரோந்து, போக்குவரத்து சீர்படுத்தும் பணி போன்ற நடவடிக்கையை அவர்கள் தொடங்கியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் – காபுலில் இருந்து கட்டார் புறப்பட்ட அமெரிக்க விமானப்படையின் சரக்கு விமானத்தில் நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் நெரிசலின் மத்தியில் பயணித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது
தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டு மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல துடித்து வருகின்றனர். இதற்காக விமானத்தில் தொங்கியபடி சென்ற 3 பேர் கீழே விழுந்து பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர்.
‘ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் போய்விட்டது’ என்ற செய்தி வந்ததுமே, உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின.
ஆப்கானிஸ்தானில் வசித்துவரும் தங்கள் நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேற்றும் பணிகளையும் தீவிரப்படுத்தின. இதனால் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையம் நேற்று முன்தினம் காலை முதலே பரபரப்பானது. அமெரிக்கா, காபூல் விமான நிலையத்தை பாதுகாப்பதற்காக கூடுதலாக 5,000 படைவீரர்களை அனுப்பி வைத்தது.