crossorigin="anonymous">
உள்நாடுபொது

நாட்டை முடக்குமாறு மல்வத்து மகாநாயக்க பீடம், 10 கட்சிகள் கூட்டாக கோரிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் முன்பை விட மிக வேகமாக அதிகரித்து வருவதன் காரணமாகவும் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதன் காரணமாகவும் நாட்டை முழுமையாக 3 வாரங்களுக்கு முடக்குமாறு, அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் 10 கட்சிகள் இணைந்து ஜனாதிபதியிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

இதேவேளை நாட்டை மேலும் ஒரு வாரத்திற்கு முடக்குமாறு, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்

கோரிக்கை கடிதத்தில் கையெழுத்திட்ட 10 கட்சிகள்

தேசிய காங்கிரஸ் – ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்
அபே ஜனபல கட்சி – அத்துரலியே ரத்தன தேரர்
ஜனநாயக இடதுசாரி முன்னணி – வாசுதேவ நாணயக்கார
லங்கா சமசமாஜ கட்சி – திஸ்ஸ விதாரண
தேசிய சுதந்திர முன்னணி – விமல் வீரவன்ச
பிவிதுரு ஹெல உருமய – உதய கம்மனபில
ஐக்கிய மக்கள் கட்சி – டிரான் அளஸ்
ஶ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சி – பீ. வீரசிங்க
ஶ்ரீ லங்கா மக்கள் கட்சி – அசங்க நவரத்ன
பொறுப்புகள் தேசிய அமைப்பு – கெவிந்து குமாரதுங்க.

ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 63 − = 56

Back to top button
error: