2014 இல் பூர்வாங்க திட்டம் தயாரிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது அதி தொழில்நுட்ப புதிய களனி பால நிர்மாணப் பணிகளில் 98.5% நிறைவடைந்துள்ளதாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
அமைச்சில் நேற்று (19) நடைபெற்ற களனி பால மீளாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்தார்
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர்
“புதிய களனி பாலத்தின் மேலதிக பணிகளில் பாதுகாப்பு கேமராக்கள் நிறுவுதல், இரும்புப் பாலத்திற்கு நிறம் தீட்டுதல், புதிய களனி பாலத்திற்கு நுழைவாயிலில் வடிகால் அமைப்பை நிறைவு செய்தல், பாலத்திற்கு மின்விளக்குகள் இடல், பாதுகாப்பிற்காக இரும்பு வேலிகள் அமைத்தல் மற்றும் நிலத்தை செப்பனிட்டு அழகுபடுத்தல் ஆகியவை அடங்கும். அவற்றை உரிய தரத்திற்கு அமைவாக துரிதமாக நிறைவு செய்யுமாறு நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யு.ஆர் பிரேமசிரிக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
புதிய களனி பாலத்தின் முடிவில் இருந்து ஒருகொடவத்தை சந்தி வரை வீதியின் இருபுறமும் மரங்களை நடுவதற்கு அமைச்சின் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். இதற்கு தண்ணீர் வழங்க நிலத்தடி நீர் குழாய் அமைப்பை உருவாக்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.