![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2021/08/bb153-e1629469759476-780x470.jpg)
இலங்கை புலனாய்வு ஊடகவியல் நிலையத்தினால் (CIR) நடாத்தப்படும் முதன்மையான பயிற்சிப் பட்டறையான ‘புலனாய்வு செய்தி அறிக்கையிடலின் அடிப்படைகள்’ தொடரின் நான்காவது மெய்நிகர்வழி பயிற்சி நெறியானது 21 ஆகஸ்ட் ,2021 அன்று நடைபெற உள்ளது. இதில் நாட்டின் பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த, தேர்தெடுக்கப்பட்ட 20 ஊடகவியலாளர்கள் பங்குபற்றவுள்ளனர்.
பத்து பயிற்சிகளை கொண்ட இந்தத்தொடரானது, சிங்களம், தமிழ், மற்றும் ஆங்கிலம் ஆகியமொழிகளில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மூன்று பயிற்சி தொடர்கள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன.
இலங்கை புலனாய்வு ஊடகவியல் நிலையத்தினால் இப்பயிற்சி நெறியினை வழங்குவதற்கானபிரதான நோக்கம், புலனாய்வு செய்தி அறிக்கையிடல் தொடர்பான அடிப்படைகளை ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் குழாமிற்கு வழங்குவதாகும்.
இப் பயிற்சியின் முடிவின்போது, அனுபவமிக்க புலனாய்வு ஊடகவியலாளர்களின் வழிகாட்டுதலுடன் புலனாய்வு செய்தி அறிக்கையிடலில் ஈடுபடுவதனை ஊக்குவிக்கும் முகமாக ஊடகவியலாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உதவித் தொகைகள் வழங்கப்படும்.
புலனாய்வு ஊடகவியல் தொடர்பான அடிப்படை பயிற்சி தொடருக்கு, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகியன அனுசரணை வழங்குகின்றன.
இந்த சான்றிதழுடன் கூடிய பயிற்சித் தொடரின் மூலமாக, இலங்கை புலனாய்வு ஊடகவியல் நிலையம் சுமார் 150 நடுத்தர அனுபவம் வாய்ந்த ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கவுள்ளது.