![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2021/08/bb156-1-e1629510190144-772x470.jpg)
கண்டி மாவட்டத்திற்கான கொவிட்19 தடுப்பு மருந்தேற்றல் வேளைத்திட்டம் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு அமைய இன்று (21) இடம்பெறும் என மத்திய மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த மாவட்டத்தில், மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்கும் திட்டம் இந்நாட்களில் முன்னெடுக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தை சுகாதார விதிமுறைகளுக்கு அமைய அடுத்து வரும் நாட்களிலும் முன்னெடுத்துச் செல்வது நோக்கம் என மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நிஹால் வீரசூரிய தெரிவித்தார்.
தடுப்பூசி பெறச் செல்லும் மக்கள் முதல் டோஸ் ஏற்றப்பட்டபோது கிடைத்த தடுப்பூசி அட்டையை அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தி தடுப்பு மருந்தேற்றல் நிலையங்களுக்கு செல்லலாம் என கண்டி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சேனக்க தலகல தெரிவித்தார்.