![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-02-19-at-12.49.29-780x470.jpeg)
(ராபி சிஹாப்தீன்)
“இலங்கை பூராகவும் முடக்கம் (Lock down) செய்யப்பட்டிருந்த போதிலும் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. ஏற்கனவே குறிப்பிடப்பட்ட தினங்களில் குறித்த தடுப்பூசி நிலையங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படும்.” என அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் இன்று (21) தெரிவித்தார்
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்
“கண்டி மாவட்டத்திற்கான கொவிட் தடுப்பு மருந்தேற்றல் திட்டம் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு அமைய இடம்பெறும், தடுப்பூசி பெறச் செல்லும் மக்கள் முதல் டோஸ் ஏற்றப்பட்டபோது கிடைத்த தடுப்பூசி அட்டையை அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தி தடுப்பு மருந்தேற்றல் நிலையங்களுக்கு செல்லலாம்
தடுப்பூசி நிலையத்திற்கு வருகை தரும்போது தடுப்பூசி , ஆள் அடையாள அட்டை தம்வசம் வைத்திருக்க வேண்டும்
இரண்டாதவிசாளர்வது தடுப்பூசியை பெறுவதை ஏனைய அனைத்து காரியங்களையும் விட முதன்மையானதாக ஆக்கிக் கொள்ளுங்கள். இந்தத் தடுப்பூசிகளைப் பெறுவதன் ஊடாக உங்களினதும் உங்களைச் சூழ இருப்பவர்களினதும் பாதுகாப்பை உத்தரவாத படுத்திக் கொள்ளுங்கள்.” எனவும் அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் தெரிவித்தார்
மாவட்டத்தில் அக்குறணை பிரதேசத்தில் மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்கும் திட்டம் இந்நாட்களில் முன்னெடுக்கப்படுகிறது.