உள்நாடுபிராந்தியம்
மட்டக்களப்பு – நாவலடி பகுதியில் கைக் குண்டொன்று மீட்பு
![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2021/08/bb166-e1629602853523-575x470.jpg)
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி கடற்கரை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக் குண்டொன்று நேற்று (21) மாலை 4.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
நாவலடி கடற்கரைக்கு அண்மித்த சவுக்குக் காட்டுப்பகுதியில் குறித்த குண்டு கைவிடப்பட்ட நிலையில் இராணுவத்தினரிற்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த குண்டை மீட்டுள்ளது
இராணுவத்தினர் குறித்த இடத்தில் பாதுகாப்புக் கடமைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.