கொரோனா தடுப்பூசி விவகாரம் உக்ரைனில் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி நீக்கம்
கொரோனா தடுப்பூசி செலுத்தும் விவகாரத்தை மோசமாகக் கையாண்டதாக குற்றச்சாட்டு
உக்ரைனில் கரோனா தடுப்பூசி செலுத்தும் விவகாரத்தை மோசமாகக் கையாண்டதால் அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
4.3 கோடி மக்கள் தொகை கொண்ட உக்ரைனில் 20 லட்சம் பேருக்கு மட்டுமே கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றும், நாட்டில் கரோனா தடுப்பூசிகள் மிகவும் நிதானமாகப் போடப்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
சுகாதாரத் துறை அமைச்சர் மக்ஸிம் ஸ்டெபனோவ் தடுப்பூசி செலுத்துவதில் தோல்வி அடைந்துவிட்டார் என்றும், கோவிட்-19 நெருக்கடியை அவர் மோசமாகக் கையாண்டதாகவும் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹாலும் விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து நடந்த நாடாளுமன்ற வாக்கெடுப்பில் உக்ரைனின் சுகாதாரத் துறை அமைச்சர் மக்ஸிம் ஸ்டெபனோவ் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
உக்ரைனில் 23 லட்சத்துக்கு அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 49 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.(இந்து)