![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2021/08/IMG_20181027_175027-scaled-e1629686626724-780x470.jpg)
(எம்.எஸ்.எம். ஹனிபா)
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக்கொண்ட ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கலாபூஷணம் மீராலெப்பை லாபிர் அவர்கள் நேற்று (22) காலமானார்.
கலாபூஷணம், சாமஶ்ரீ தேசகீர்த்தி, தேச்சக்தி, ஊடகச்சுடர், நிழல்படத் தாரகை ஆகிய விருதுகளைப் பெற்ற எம்.எல். லாபிர் அவர்கள் முஸ்லிம் மீடியா போரத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளராகவும், நவமணி, விடிவெள்ளி, வீரகேசரி, தமிழ் மிரர், மெட்ரோ நியூஸ் ஆகிய பத்திரிகைகளின் செய்தியாளராகவும் சேவையாற்றினார்.
மானிப்பாய் வீதி பெரிய முஹிதீன் ஜூம்மா பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபைத் தலைவராக கடமையாற்றிய லாபிர் அவர்கள், பிளவ்ஸ் ஹாஜியார் பவுண்டேஷன் என்னும் அமைப்பின் மூலம் பல சமூகப் பணிகளை ஆற்றி வந்தார்.