![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2021/08/bb175-e1629766513162-780x470.jpg)
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காங்கேயனோடை பகுதியில் கைத் துப்பாக்கி உட்பட இரண்டு மகசின்களையும் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று (23) கைப்பற்றியுள்ளனர்.
காங்கேயனோடையில் உள்ள வெற்றுக் காணியொன்றில் குறித்த துப்பாக்கியை வீசி விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் மகசின்கள் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.