crossorigin="anonymous">
உள்நாடுபொது

கண்டி – அக்குறணை பிரதேசத்தில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கும் திட்டம்

(ராபி சிஹாப்தீன்)

கண்டி – அக்குறணை பிரதேசத்தில் மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கும் திட்டம் நாளை  25 ஆம் திகதி புதன் கிழமை  தொடக்கம் எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளன

தடுப்பூசி தொடர்பான அறிவித்தல் அக்குறணை பிரதேசத்தில் குறித்த பிரதேசத்திற்குரிய கிராம சேவகர்கள் ஊடாக பொது மக்களுக்கு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

கண்டி மாவட்டத்திற்கான கொவிட் தடுப்பு மருந்தேற்றல் திட்டம் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு அமைய இடம்பெறும், தடுப்பூசி பெறச் செல்லும் மக்கள் முதல் டோஸ் ஏற்றப்பட்டபோது கிடைத்த தடுப்பூசி அட்டையை அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தி தடுப்பு மருந்தேற்றல் நிலையங்களுக்கு செல்லலாம்

இலங்கை பூராகவும் முடக்கம் (Lock down) செய்யப்பட்டிருந்த போதிலும் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதுடன் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட தினங்களில் குறித்த தடுப்பூசி நிலையங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன

தடுப்பூசி நிலையத்திற்கு வருகை தரும்போது தடுப்பூசி அட்டை, ஆள் அடையாள அட்டை தம்வசம் வைத்திருக்க வேண்டும், இரண்டாவது தடுப்பூசியை பெறுவதை ஏனைய அனைத்து காரியங்களையும் விட முதன்மையானதாக ஆக்கிக் கொள்ளுமாறும் தடுப்பூசிகளைப் பெறுவதன் ஊடாக உங்களினதும் உங்களைச் சூழ இருப்பவர்களினதும் பாதுகாப்பை உத்தரவாத படுத்திக் கொள்ளுமாறும் பிரதேச அரசியல்வாதிகள், சமூகநல அமைப்புக்கள், சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளன.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 32 + = 33

Back to top button
error: