ஜப்பான் – டோக்கியோ 2020 கோடைக்கால பாராலிம்பிக்ஸ் போட்டி ஆரம்பம்
ஜப்பான் – டோக்கியோ 2020 கோடைக்கால பாராலிம்பிக்ஸ் போட்டி நேற்று (24) ஜப்பானின் டோக்கியோவில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த ஆண்டு போட்டியை ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
09 விளையாட்டு வீரர்கள் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த தகுதி பெற்றுள்ளனர். மேலும் இதில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, படகோட்டும் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது.
1. சம்பத் பண்டார – வில்வித்தை
2. தினேஷ் பிரியந்த ஹேரத் – ஈட்டி எறிதல்
3. சமிதா துலான் – ஈட்டி எறிதல்
4. சம்பத் ஹெட்டியாராச்சி – ஈட்டி எறிதல்
5. குமுது பிரியங்கா – 100m/ நீளம் தாண்டுதல்
6. சமன் சுபாசிங்க – 400m
7. பாலித பண்டார – ஈட்டி எறிதல்
8. மகேஷ் ஜெயக்கொடி – Roving
9. டி.எஸ். தர்மசேன – W/Tennis
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த பாராலிம்பிக் போட்டிகளில் T46 400m போட்டியில் பிரதீப் சஞ்சய வெண்கலப் பதக்கத்தையும், தினேஷ் பிரியந்த கடந்த 2016 பாராலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
டோக்கியோவில் 2020 பாராலிம்பிக் போட்டிகள், கடந்த ஆண்டு நடைபெறவிருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக 2021 வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது