
2021 வாக்காளர் பட்டியலுக்கான படிவங்கள் தற்போதைய கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக வீடு வீடாக விநியோகிக்கப்படாது என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2020 வாக்காளர் பட்டியலில் ஒருவர் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவர்கள் புதிய படிவங்களை நிரப்ப வேண்டிய அவசியமில்லை என்றும் 2021ஆம் ஆண்டுக்கான அதே முகவரியின் கீழ் பதிவு செய்யப்படுவர் என்றும் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் அனைத்து கிராம சேவகர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட இருந்தது. எனினும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப் பட்டதால் வாக்காளர் பதிவேடுகளின் காட்சி காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.