crossorigin="anonymous">
உள்நாடுபொது

புகைப்பிடிப்பவர்கள் கொவிட்19 காரணமாக மரணிக்க அதிக வாய்ப்பு

புகைப்பிடிப்பவர்கள் கொவிட்19 காரணமாக மரணிக்க அதிக வாய்ப்புள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

புகைபிடித்தல் நுரையீரலின் செயல்பாட்டை பலவீனப்படுத்துகிறது என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா கூறினார்.

சிகரெட், சுருட்டு அல்லது வேறு வேறு வகையில் புகைப்பிடிப்பவர்களின் நுரையீரல் செயல்பாடு பலவீனம் அடைவதாகவும் விசேட வைத்தியர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறானவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்படுவதனால், மிக விரைவாக கொவிட் நிமோனியா நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

புகைப்பிடிப்பவர்களுக்கு அருகாமையில் இருக்கும் குழந்தைகளின் நுரையீரலிலும் சிகரெட் புகையானது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இவ்வாறான குழந்தைகளுக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டால் உடலில் கடுமையான நோய்கள் ஏற்பட்டு மரணம்கூட ஏற்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 2 + 6 =

Back to top button
error: