மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முதலாக பல கோடி ரூபாய் செலவில் கொவிட் நோயாளிகளுக்கான நவீன அதி தீவிர சிகிச்சைப் பிரிவானது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் திறந்துவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் புவனேந்திரநாதன் தெரிவித்துள்ளார்.
ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க வேலைகள் அனத்தும் வைத்திய அத்தியட்சகர் தலமையில் நேற்று (01) நடைபெற்றது.
இதன்போது பொது வைத்திய நிபுணர்கள் மயக்க மருந்து வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள் என பலரும் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவானது கொரணா நோயினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளை வைத்து அதி தீவிர சிகிச்சையளிக்கும் பிரிவாக இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.