(ராபி சிஹாப்தீன்)
வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், அடியவர்களால் “அலங்காரக் கந்தன்” எனப் போற்றி வழிபடப்படுகின்ற ஈழத்தின் முருக திருத்தலமுமாகிய யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று (05) ஞாயிற்றுக்கிழமை காலை பக்திப்பூர்வமாக நடைபெற்றது.
வருடாவருடம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாவின் தேர்த் திருவிழா இலட்சோப இலட்சம் அடியவர்களின் பங்குபற்றுதலுடனும் மிகவும் கோலாகலமாக இடம்பெற்று வருகின்ற வழமை
தற்போது நாட்டிலும், யாழ். மாவட்டத்திலும் தலைவிரித்தாடும் கொரோனாப் பெருந் தொற்று மற்றும் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாக ஆலய உள் வீதியில் மாத்திரம் மிக எளிமையான முறையில் கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் இன்றைய தேர்த் திருவிழா நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.