crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை ரஷ்ய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் – இலங்கை பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

இலங்கையிலுள்ள ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் அலெக்ஸி ஏ. போண்டரேவ், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் (03) சந்தித்தார்.

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் அதிமேதகு யூரி மேடெரி இந்த சந்திப்பின்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகரை பாதுகாப்புச் செயலாளருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இதன்போது புதிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பாதுகாப்புச் செயலாளர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சினேக பூர்வ கலந்துரையாடப்பட்டது.

சந்திப்பின்போது இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி தினேஷ் நாணயக்கார, ரஷ்ய தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் பாவெல் வி.இவாஷின்னிகோவ் ஆகியோர் கலந்து கொண்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 3 =

Back to top button
error: