crossorigin="anonymous">
உள்நாடுபொது

கண்டியில் 1,20,000 பேர் ஸ்புட்னிக் 2 ஆம் மாத்திரை பெற வழியில்லை – லக்ஸ்மன் கிரியெல்ல

(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)

கண்டி மாவட்டத்தில் ‘ஸ்புட்னிக் வீ’ தடுப்பூசியின் முதலாம் மாத்திரை பெற்றவர்கள் சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேர் இரண்டாம் மாத்திரை பெற வழியின்றி நிர்கதி நிலைக்குள்ளாகி இருப்பதாக கண்டி மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் லக்ஸ்மன் கிரியெல்ல (04) தெரிவித்தார்.

கண்டியில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது

“கண்டி மாவட்டத்தில் சுமார் இரண்டு மாத காலத்திற்கு முன் 1,50,000 ற்கும் மேற்பட்டவர்களுக்கு ஸ்புட்னிக் முதலாம் மாத்திரை வழங்கப்பட்டது. பின்னர் சுமார் 15000 பேரளவில் இரண்டாம் மாத்திரையைப் பெற்றுக் கொண்டனர். புதிதாக இன்னும் 15000 மாத்திரைகள் கிடைக்கப் பெற்றபோதும் அது சகலருக்கும் போதுமானதல்ல.

எனவே சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக இரண்டாம் மாத்திரைக்காகக் காத்து நிற்பவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொள்ள வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். தனக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் படி ஸ்புட்னிக் தடுப்பூசியைத் தயாரிக்கும் ரஷ்ய நிறுவனம் அதனை இடை நிறுத்தியுள்ளதாக அறிய வருகிறது. எனவே மேற்படி 120 000 பேருக்கு என்ன செய்வது என அவர் கேள்வி எடுப்பியுள்ளார்.”

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 86 − = 79

Back to top button
error: