
இலங்கையில் ஒக்ஸி மீட்டருக்கான அதிகபட்சமாக சில்லறை விலைக்கான வர்த்தமானி அறிவிப்பு (04) வெளியிடப்பட்டுள்ளதுடன் இதற்கமைய ஒக்ஸி மீட்டரின் அதிகபட்ச சில்லறை விலை ரூபா மூவாயிரம்
சமீபத்திய நாட்களில், சில மருந்தகங்கள் ஒக்ஸி மீட்டர்களை அதிக விலைக்கு விற்கின்றன. மேலும் சில கடைகள் தரமற்ற ஒக்ஸிமீட்டர்களை விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.
எதிர்காலத்தில் மேலும் இதுபோன்ற மருத்துவ மற்றும் சுகாதார உபகரணங்களுக்கு சரியான தரத்தை வழங்கவும் அதிகபட்ச விலையை நிர்ணயிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.