
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து அண்மையில் வீடு திரும்பிய ஜிப்சீஸ் இசைக் குழுவின் தலைவரும் அதன் பிரதான பாடகருமான சுனில் பெரேரா நேற்று திடீரென சுகவீனமுற்று தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (06) அதிகாலை காலமானார்
மரணிக்கும் போது அவருக்கு வயது 69 ஆகும். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து அண்மையில் வீடு திரும்பியிருந்த நிலையில், நியூமோனியா நிலை உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அவர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்
சுனில் பெரேராவின் பாடல்கள் சிங்கள மக்கள் மத்தியில் மாத்திரமல்லாது தமிழ் ரசிகர்களிடையேயும் மிகவும் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.