கொழும்பு துறைமுகத்தின் வடமேற்கு கடற்பகுதியில் நங்குரமிட்டுள்ள எம் வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப் படுத்தும் நடவடிக்கை தொடர்ந்த இடம்பெற்றுவருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கப்பலில் உள்ள கொள்கலன்களுக்கு மேல் பகுதியி ல்அடிக்கடி தீ ஏற்படுவது அவதானிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவும்வகையில் கடற்படையின் சிந்துரல கப்பலும் தீ ஏற்பட்பட கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகருக்கு அருகாமையில் உள்ள கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள எம் வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப் படுத்தப்பட்டாலும் இடைக்கிடையே அதில் தீப்பற்றல் ஏற்படுவதாக சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.
நைட்ரிக் அசிட் எத்தனோர போன்ற தீப்பற்றக்கூடிய இரசாயன பொருட்கள் உள்ளமை தெரியவந்துள்ளது. கப்பலில் இரசாயனப் பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளமையினால் அதில் அடிக்கடி தீ ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். கப்பலினால் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் அதிகார சபை தெரிவித்துள்ளது.