![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2021/09/bb365-e1631152225514.jpg)
நீர் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது.தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள காலத்தில் நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு சலுகைக் காலத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்
2025 ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் தூய குடிநீர் என்ற தொனிப்பொருளில் அரசாங்க தகவல் திணைக்களத்தில்நேற்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
“நீர் விநியோகிக்கும் விடயத்தை அரசியலாக்க எவருக்கும் இடமளிக்க போவதில்லை ‘நீரையும், நீர் மூலங்களையும்’ பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பரிட்சார்த்த செயற்திட்டம் குருவிட்ட பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக” அமைச்சர் தெரிவித்தார்.
சுபீட்சத்தின் தொலைநோக்கு’ கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக 2025 ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் தூய குடிநீரை வழங்கும் நோக்கில் பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.