crossorigin="anonymous">
உள்நாடுபொது

கொழும்பிலுள்ள வியட்நாம் தூதுவர் – வெளிநாட்டு அமைச்சர் சந்திப்பு

கொழும்பில் உள்ள வியட்நாம் தூதுவர் ஹோ தி தன் ட்ரூக் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை நேற்று (08) வெளிநாட்டு அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இரு நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 50வது ஆண்டு விழா 2020 இல் நடைபெற்றதனை நினைவுகூர்ந்த அதே வேளை, இலங்கை மற்றும் வியட்நாமுக்கு இடையே பரஸ்பரம் நன்மை பயக்கும் கூட்டணியை பாராட்டிய வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சாரத் தளங்ளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நாட்டின் ஆர்வத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

2009 இல் இடம்பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வியட்நாமுக்கான உத்தியோகபூர்வ விஜயம் உட்பட இரு நாடுகளுக்கும் இடையேயான வழக்கமான உயர் மட்டத் தொடர்புகளையும் அவர் நினைவு கூர்ந்தார்.

அரசியல் உறவுகளில் அனைத்து நிலைகளிலும் கவனம் செலுத்துவதோடு, வர்த்தகம் மற்றும் முதலீடு, விவசாயம், மீன் வளம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, கலாச்சாரம் போன்ற துறைகளில் இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையேயான ஒத்துழைப்பின் பன்முகத் தன்மையை தூதுவர் ட்ரூக் விவரித்தார்.

சர்வதேச அரங்குகளில் வியட்நாமால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவுகளுக்கு அமைச்சர் பீரிஸ் பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், பரஸ்பரம் ஆர்வமுள்ள பகுதிகளில் ஒத்துழைப்பை வரவேற்றார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 60 = 62

Back to top button
error: