crossorigin="anonymous">
உள்நாடுபொதுவணிகம்

இலத்திரனியல் சாதனங்கள் உட்பட பல பொருட்கள் இறக்குமதி வரையறை

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை நேற்று 2021 செத்தெம்பர் 08 அன்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில் உடனடியாகச் செயற்படும் வகையில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுடனான மற்றும் தேசிய சேமிப்பு வங்கியுடனான நாணயக் கடிதங்களின் அத்துடன் ஏற்றுக்கொள்ளல் நியதிகளுக்கெதிரான ஆவணங்களின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற / அவசரமற்ற பொருட்களின் இறக்குமதிக்கெதிராக 100 சதவீத காசு எல்லை வைப்புத் (Letter of Credit)(LC) தேவைப்பாட்டினை விதிப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

காசு எல்லை வைப்புத் தேவைப்பாட்டினை விதிப்பதற்கான தீர்மானம், குறிப்பாக, ஊகவியாபாரத் தன்மையிலான மிதமிஞ்சிய இறக்குமதிகளை ஊக்கமிழக்கச் செய்வதன் வாயிலாக செலாவணி வீத உறுதிப்பாட்டினையும் வெளிநாட்டு நாணயச் சந்தை திரவத் தன்மையினையும் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்குத் துணையளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

காசு எல்லை வைப்புத் தேவைப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள உற்பத்தி வகைகளின் தொகுப்பு 2019, 2020 மற்றும் 2021 இன் இதுவரையிலும் (தற்காலிகமானவை) ஒவ்வொரு வகையின் கீழுமான இறக்குமதிச் செலவினம் பற்றிய தகவல்களுடன் சேர்த்து மேலேயுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 57 = 64

Back to top button
error: