இலங்கையில் 95.8% ஆன கொவிட்-19 தொற்றாளர்களுக்கு ஏற்பட்டிருப்பது டெல்டா திரிபு என, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் கல உயிரியல் பிரிவினால் (AICBU) வெளியிடப்பட்டள்ள ஆய்வறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் வெவ்வேறு SARS-CoV-2 திரிபுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டறிந்துள்ளனர்.
பேராசிரியர் நீலிகா மலவிகே, வைத்தியர் சந்திம ஜீவந்தர உள்ளிட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக (USJ) ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆய்வில், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மூலக்கூறு மற்றும் மூலக்கூற்று மருத்துவத் பிரிவின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் கல உயிரியல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆய்வு, 95.8% ஆனோருக்கான தொற்றுக்கு காரணம் டெல்டா திரிபே (Delta variant) என்பதைக் காட்டியுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.