மன்னார் பெரியமடு குளத்தில் 4 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளது
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனமும் வடக்கு மாகாண சபையும் இணைந்து மன்னார் பெரியமடு குளத்தில் 4 லட்சம் இறால் குஞ்சுகள் நேற்றைய தினம் (10) வெள்ளிக்கிழமை மாலை விடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காலத்தில் கிராம மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அதேவேளை நன்னீர் மீன்பிடி தொழிலை ஊக்குவிப்பதற்காகவும் இவற்றிற்கான இறால் குஞ்சுகளை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்தது கொள்வனவு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் மன்னார் மாவட்ட பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ, மன்னார் அனர்த்த முகாமைத்துவ உதவி ஆணையாளர் கனகரத்தினம் திலீபன், வடக்கு மாகாண சபை உத்தியோகத்தர்கள், தேசிய நீர் உயரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் மன்னர் மெசிடோ நிறுவன ஊழியர்கள் மற்றும் பெரியமடு நன்னீர் மீன்பிடி சங்கத்தினர் போன்றவர்களும் கலந்து கொண்டார்கள்.
கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள குளங்களுக்ளிலும் இறால் குஞ்சுகள் விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் மாவட்ட பணிப்பாளர் திரு யாட்சன் பிகிராடோ தெரிவித்தார்