கரையோர வள பாதுகாப்பு தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா இன்று (16) திருகோணமலை சாம்பல்தீவு களப்பு பிரதேசத்திற்கு விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
சாம்பல் தீவு களப்பு பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் காணி அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதன் காரணமாக அப்பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது மக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து பிரதேசத்திற்கான கள விஜயத்தை அவர் இன்று மேற்கொண்டார்.
களப்பு பிரதேசம் மிக முக்கியமானதாக காணப்படுகின்றது. வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்தல் உட்பட மீனவ குடும்பங்களை வாழ்வாதாரம் மேம்பட பாரிய பங்களிப்பை களப்புக்கள் வழங்குகின்றன.
சாம்பல்தீவு களப்பு பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தால் உடனடியாக உரிய நபர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் சாம்பல்தீவு பிரதேசம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கை ஒன்றை தமக்கு வழங்குமாறு இதன்போது அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
ஜனாதிபதி சுற்றுச்சூழல் மீது மிக்க ஆர்வம் கொண்டுள்ளவராக காணப்படுவதாகும் சுற்றாடல் நேயமிக்க அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலமாக நாட்டினுடைய அபிவிருத்தி செய்யும் சிந்தனையில் செயற்பட்டு வருகின்றார். எனவே சுற்றாடலுக்கு எதிரான செயற்பாடுகள் நடைபெறுகின்ற சந்தர்ப்பத்தில் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தாம் பின்னிற்கப் போவதில்லை என்றும் இதன்போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
சாம்பல்தீவு களப்பு பிரதேசத்தில் அமைச்சர் தலைமையிலான அதிகாரிகளால் கண்டல் தாவரங்களும் நடப்பட்டமை குறிப்பிடதக்கது .
இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் உடைய தலைவருமாகிய கபில நுவன் அத்துகோரள, கரையோரம் பேணல் கரையோர மூல வள பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், அமைச்சரது பணி குழாத்தினர், உரிய அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.