crossorigin="anonymous">
Uncategorizedஉள்நாடுபிராந்தியம்

மூதூர் – ஷாபி நகர் கிராம சௌபாக்கிய உற்பத்தி கிராம நிகழ்ச்சி வேலைத்திட்டம்

சௌபாக்கிய உற்பத்தி கிராம நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட ஷாபி நகர் கிராமத்தின் வேலைத்திட்டம் நேற்று (17) திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமாகிய கபில நுவன் அத்துகோரல தலைமையில் நடைபெற்றது

இக் கிராமம் கோழி வளர்ப்பு கிராமமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. 100 பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கோழிக் குஞ்சுகள், கோழி வளர்ப்புக்கான உபகரணங்கள் மற்றும் கோழிக்கூடு அமைப்பதற்கான நிதி உதவி என்பன இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

கிராமிய மக்களினது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக உற்பத்தி கிராம நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் குறுகிய காலத்தில் குறை வருமானம் கொண்ட மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்றும் எதிர் வருகின்ற காலங்களில் இவ்வேலைத் திட்டத்தை சிறப்பாக முன்னெடுக்கின்ற சந்தர்ப்பத்தில் இதுபோன்ற பல வேலைத்திட்டங்களை இப்  பிரதேசத்தில் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் உற்பத்தி கிராம வேலைத்திட்டத்தின் கீழ் 14 வேலைத்திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு உரிய வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் தமக்கு வழங்கப்பட்ட உதவிகளை அடிப்படையாகக் கொண்டு வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இதனூடாக அவருடைய தொழில் முயற்சியை மேலும் விருத்தி செய்வதற்கு உரிய உதவிகள் வழங்கப்படும் என்று இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

இந் நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர் எம் .பி .எம். முபாரக், பிரதேச அரசியல் தலைமைகள், அரச அதிகாரிகள் மற்றும் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 66 − 62 =

Back to top button
error: