இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மேலும் 103 மரணங்கள் நேற்று (18) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, இன்று (19)அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்கனவே 12,022 கொரோனா வைரஸ் தொற்று மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று 103 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 12,125 கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று மரணமடைந்த 103 பேரில், 56 பேர் ஆண்கள், 47 பேர் பெண்கள் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டோர் 77 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.