crossorigin="anonymous">
உள்நாடுபொது

பாராளுமன்ற உறுப்பினராக  ஜயந்த கெட்டகொட பதவிப்பிரமாணம்

பாராளுமன்றத்தின் உறுப்பினர் ஒருவராக ஜயந்த கெட்டகொட அவர்கள் 9வது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (21) உறுதியுரை செய்துகொண்டார்.

சபாநாயகர் முன்னிலையில் உறுதியுரை செய்து கொண்ட அவர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதிவேட்டில் கையொப்பமிட்டார்.

அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஜயந்த கெட்டகொட அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதற்காக ஜயந்த கெட்டகொட அவர்கள் கடந்த ஜூலை மாதம் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தார்.

கொழும்பு லும்பினி கல்லூரியின் பழைய மாணவரான ஜயந்த கெட்டகொட அவர்கள் கட்புல ஆற்றுகைக் கலைகள் பல்கலைக்கழகத்தின் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்பான டிப்ளோமாதாரி ஆவார்.

1991 இல் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கடுவலை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்ட அவர் 1999 மேல் மாகாண சபைக்கு தெரிவாகினார்.

2000 ஆம் ஆண்டில் முதன்முறையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவான கெட்டகொட அவர்கள் அவர்கள் இன்றுடன் ஐந்து முறை பாராளுமன்ற உறுப்பினராக உறுதியுரை செய்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 15 − 8 =

Back to top button
error: