ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் நியூயோர்க் நகரில் இடம்பெறுகின்ற, ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக கடந்த 18 ஆம் திகதி அதிகாலை, இலங்கையிலிருந்து புறப்பட்ட ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று, திகதி, புதன் கிழமை, முற்பகலில் கூட்டத் தொடரில் உரையாற்றவுள்ளார்
ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் அரசத் தலைவராக உரையாற்றவுள்ள முதல் சந்தர்ப்பமும் இதுவாகும்.
இந்தக் கூட்டத்தொடரில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
“கொவிட் 19 நோய்த்தொற்றுப்பரவலில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை வளர்த்தல், நிலைத்தகுதன்மையை மீளக் கட்டியெழுப்புதல், பூமியின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மறுமலர்ச்சி” என்ற தொனிப்பொருளிலேயே ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடர் இடம்பெறுகின்றது.