புத்தளம் நகர சபை முதல்வர் கே.ஏ. பாயிஸ் காலமானார்
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் அவர்கள் சற்று முன்னர் (23) காலமானார்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமானக கே.ஏ பாயிஸ் , ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் இருந்துள்ளதுடன் இறுதியாக இறக்கும்போது புத்தளம் நகர சபைத் தலைவராக பதவி வகித்தார்
கடந்த 2004 முதல் 2010 காலப் பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அவர், 2007 – 2010 காலப் பகுதியில் மாகாணசபைகள் பிரதியமைச்சருமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் (23) ஏற்பட்ட வாகன விபத்தைத் தொடர்ந்து அவர் இறந்துவிட்டதாக புத்தளம் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததுடன் மரணிக்கும்போது அவருக்கு வயது 52 ஆகும்
இறுதிச்சடங்கு (ஜனாஸா) பற்றிய மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன